ஐரோப்பிய தொழிற்துறையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கும் சீனா
கார்கள், விமானங்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் அத்தியாவசிய மூலப்பொருளான மக்னீசியத்தை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா குறைத்துள்ளது.
ஐரோப்பாவுக்கு மக்னீசியத்தை ஏற்றுமதி செய்யும் பிரதான நாடாக சீனா விளங்கி வருகின்றது.
சீனா தனது ஏற்றுமதியை குறைத்துள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள மக்னீசியம் தட்டுப்பாட்டால் ஐரோப்பிய தொழிற்துறையினர் கடும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவிட் தொற்று நோய் நிலைமைக்கு பின்னர் மீண்டும் தமது தொழிற்துறைகளை ஆரம்பிக்க தேவையான பிரதான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொழிற்துறைகளை நடத்திச் செல்வதில் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதாக தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளுக்கு தேவையான மெக்னீயத்தில் 95 வீதமான மெக்னீசியத்தை சீனாவே ஏற்றுமதி செய்கின்றது. ஏனைய 5 வீதத்தை ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening