ஈரான் தாக்குதல்களை நிறுத்த சீனா - இந்தியா தலையிட வேண்டும்: பாதுகாப்பு ஆய்வாளர்
ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம், அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தங்களுக்குத்தான் தற்போது சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.
இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை," என்று கூறினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள்
"இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல வழிகள் இருப்பதால், அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம் என்று புஸ்ஸாய் கூறினார்.
"இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம். ஈரானை நல்வழிப்படுத்த வெளியில் இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.
இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல், குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தலையிட வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan