சீனா - இந்தியா இடையில் இலங்கையின் உடனடி இராஜதந்திர தலையீடுகள் அவசியம் - முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் யுவான் வேங் - 5 ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகள் செய்யப்பட வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க [Dayan தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் வெளிவிவகார அமைச்சர் ஊடாகவோ அல்லது ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் ஊடாகவோ அல்லது பிரதமரின் தலையீடாகவோ இருக்க வேண்டும் குறித்த விசேட பிரதிநிதி, உடனடியாக சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சென்று, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடை நிலைத் தீர்வுக்கு வருவது அவசியமானதாகும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சீனாவை கோபப்படுத்திக் கொண்டால், கடன் மறுசீரமைப்பு அல்லது வேறு கடனைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினை ஏற்படும். அதேநேரம், இந்தியாவை கோபப்படுத்திக்கொண்டால், அங்கும் பாரிய பிரச்சினை ஏற்படும், எமக்கு அவசியமான சந்தர்ப்பத்தில், இந்தியா இவ்வாறாக நட்புறவை வெளிப்படுத்தும் நிலையில், இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய சீனாவின் கப்பலுக்கு இடமளிப்பதாயின், அதனூடாக தாமாகவே குழியை வெட்டிக்கொண்டு, அதற்குள் இந்த அரசாங்கம் வீழ்ந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆசனத்தில் யார் அமர்வது என்பது குறித்து ஆராயாமல், நாட்டின் இராஜதந்திர உறவு குறித்து பரந்தளவில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
இந்த சீனக் கப்பல், விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் ஒன்றல்ல. இது அவசரமாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தக் கப்பலை அனுப்புவது குறித்து, சீனா விடுத்த கோரிக்கைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்தது. இது, எந்த வகையிலான கப்பல் என்பதை வெளிவிவகார அமைச்சு அறிந்திருக்கவில்லையா? குறித்த கப்பலில் அதிநவீன இலத்திரனியல் கட்டமைப்பு உள்ளது.
இந்தியா இதனை எவ்வாறு நோக்கும். இந்தக் கப்பல், பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் அல்ல. 2015 இல் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தொடர்பில் இதுபோன்ற பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. எனவே, இது போன்ற ஒன்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தி, அந்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
'யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், நேற்று முற்பகல் 9.30 அளவில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அடைய உள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
பாதுகாப்பு காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் -5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர, மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில், குறித்த கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க கோரிக்கை விடுக்கப்பட்டால், இராஜதந்திர ரீதியில், அதற்கமைவான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
