யுவான் வாங் 5! இராஜதந்திர மோதலில் இறங்கிய சீனாவும் இந்தியாவும்: கருத்து தெரிவிக்க மறுத்த ரணில்
கருத்து தெரிவிக்க ரணில் மறுப்பு
இலங்கை விவகாரத்தால் சீனா மற்றும் இந்தியத் தூதரகங்கள் இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு தூதரகங்களுக்கும் இடையிலான கருத்து மோதல் தொடர்பில் தாம் பதிலளிக்க விரும்பவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கின்றது என சீனத் தூதுவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

சீனா, இந்திய இராஜதந்திர மோதல்
இதற்கு, சீனத் தூதுவர் இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவதாகவும், சீனா இலங்கையை கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாகவும் இந்தியா கடும் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யுவான் வாங் 5 கப்பல் விவகாரத்தில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர மோதல் ஏற்பட்டிருந்தது. அத்துடன் இலங்கையின் இறையாண்மை மீது இந்தியா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் சீனா கடுமையாக பதிலளித்திருந்தது.
அதற்கு இந்தியா தனது கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்டிருந்து என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 13 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan