வடக்கில் காலூன்ற சீனா முஸ்தீபு! கொந்தளிக்கும் தாயக உறவுகள்
கௌதாரிமுனை பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் கடல் அட்டைப் பண்ணை நடத்தி வரும் விடயம் கடந்த இரு வாரங்களாக சர்ச்சை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சீனா உலக அரங்கில் ஆதிக்க சக்தியாக தன்னை மாற்றிக் கொள்வதற்கு பல நாடுகளில் அரசியல், பொருளாதார வியாபார நகர்வுகளில் சூட்சுமமாக தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. இதுவரை நாட்களிலும் தென்னிலங்கையில் பலமாக தனது ஆதிக்கத்தை செலுத்திய சீனா மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பகுதிகளையும் ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில், வடக்கிலும் தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கான அடிகளை சீனா முன்னெடுக்கத் துவங்கியுள்ளது.
ஏற்கனவே முப்பது ஆண்டு காலம் ஆட்டிப்படைத்த கொடிய யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு, தற்போதைய கோவிட் இடர்நிலையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்போது இது போன்ற அந்நிய சக்திகளின் இடையூறுகள் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் கௌதாரிமுனையில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டிருக்கும் கடல் அட்டை பண்ணை தொடர்பான முழு விபரங்களையும் அதனால் பாதிக்கப்படக் கூடிய தாயக உறவுகளின் உளக்குமுறல்களையும் தாங்கி வருகின்றது இந்த விசேட தொகுப்பு,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
