சுதந்திர வர்த்தக ஒப்பந்த விவகாரம்! இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா
கடன் மறுசீரமைப்பு மூலம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபடுவதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கையை கட்டாயப்படுத்துவதற்கு, சீனா அதன் நிதி செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் நிலைமையானது வெளிநாட்டுக் கடன்களை அதிகமாக நம்பியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மூலோபாய நலன்களுடன் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள்
இறுதியில் இலங்கையில் சீனாவின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான அதன் உந்துதல் என்பன பிராந்தியத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளன.

சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பொருளாதார உறவுகளை பன்முகப்படுத்த இலங்கை முயன்று வரும் நிலையில், இந்த இலக்குகளை அடைவதில் நாடு வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தியை மூலோபாய நலன்களுடன் சமநிலைப்படுத்துவதன்
முக்கியத்துவத்தையும் வெளிநாட்டுக் கடன்களை அதிகமாகச் சார்ந்திருப்பதால்
ஏற்படும் அபாயங்களையும் இலங்கையின் நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக குறித்த
ஊடகம் தெரிவித்துள்ளது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam