அமெரிக்காவின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடைகளை விதித்து வருகிற சீனா
ஹொங்காங்கின் சீன அதிகாரிகள் மீது, அண்மையில் அமெரிக்கா, தடை விதித்தமைக்கு பதிலளிக்கும் வகையில் சீனா, அமெரிக்காவின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தடைகளை விதித்து வருகிறது.
இந்தநிலையில், தடை செய்யப்பட்டவர்களில் , அமெரிக்க முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸும் அடங்குவார்.
அமெரிக்கத் துணை ராஜாங்க செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு வருகை தர சில நாட்களுக்கு முன்னர் இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் வர்த்தக செயலாளராக, ரோஸ், சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஹுவாய் உள்ளிட்ட முன் உரிமம் இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தினார்.
ஹொங்காங்கின் சீன அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகள், பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒடுக்குமுறையில் அவர்களின் பங்கு என்பதைக் காரணமாகக் கொண்டிருந்தது.
பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு எதிராக, சீனா, கடந்த ஆண்டு ஹொங்காங்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பிரிவினைக்கு வித்திட்டால், அதிகபட்ச ஆயுள் தண்டனையைப் பரிந்துரைக்கிறது.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
