ஜப்பானை தனிமைப்படுத்தும் முக்கிய திட்டம்! முன்னணி நிறுவனங்களுக்கு சீனா தடை
தாய்வான் விவகாரத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பான் நாட்டின் 40 முன்னணி நிறுவனங்கள் மீது சீனா கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (24) அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (Mitsubishi Heavy Industries), கவாசாகி (Kawasaki Heavy Industries) மற்றும் புஜிட்சு (Fujitsu) உள்ளிட்ட 20 முக்கிய நிறுவனங்கள் 'ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில்' சேர்க்கப்பட்டுள்ளன.
இரட்டை பயன்பாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி
இந்த நிறுவனங்களுக்கு இராணுவ மற்றும் சிவில் பயன்பாடுகளுக்கு உதவும் "இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை" (Dual-use items) ஏற்றுமதி செய்ய சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 நிறுவனங்கள், குறிப்பாக சுபாரு (Subaru) மற்றும் மிட்சுபிஷி மெட்டீரியல்ஸ் போன்றவை ஒரு கண்காணிப்புப் பட்டியலில் (Watchlist) வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, அவை ஜப்பானிய இராணுவத்தால் பயன்படுத்தப்படாது என்பதற்கான கடுமையான ஆய்வுகள் மற்றும் உறுதிமொழிகள் தேவைப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் "மீண்டும் ஆயுதமயமாக்கல்" (Remilitarization) மற்றும் அணுசக்தி நோக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் விளக்கமளித்துள்ளது.
ஜப்பானை தனிமைப்படுத்தும் விதமாக நடவடிக்கை
ஜப்பானிய பிரதமர் சானே டகாயிச்சி (Sanae Takaichi) சமீபத்தில் தாய்வான் பாதுகாப்பு குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடியாகவே சீனா இந்த "பொருளாதார ஆயுதத்தைப்" பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இந்தத் தடையானது செமிகண்டக்டர் (Semiconductor), ஏரோஸ்பேஸ் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களுக்குத் தேவையான அரிய வகை தாதுக்கள் (Rare Earths) சீனாவிலிருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இதேபோன்ற கட்டுப்பாடுகளை சீனா விதித்திருந்த நிலையில், தற்போது ஜப்பானைத் தனிமைப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் மற்ற ஜப்பானிய நிறுவனங்களுக்குத் தடையின்றி வர்த்தகம் தொடரும் என்றும் சீனா கூறியுள்ளது.
காவேரி உயிருடன் இருக்கும் விஷயத்தை அறியும் விஜய், ஷாக்கான குடும்பம்.. மகாநதி சீரியல் புதிய புரொமோ Cineulagam
நாயகனாக அறிமுகமாகும் வித்யாசாகர் மகன் ஹர்ஷவர்தன்.. அவரது ' மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் Cineulagam