இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வெளிப்படையான இருப்பை நிலைநாட்டிய சீனா!
இந்தியாவும் சீனாவும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் செல்வாக்கைப் பெற போட்டியிடுவதாகவும், இது ஒரு இழுபறி நிலைமை என்றும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சீனா ஏற்கனவே இலங்கையில் ஒரு வெளிப்படையான இருப்பை நிலைநாட்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்
இதற்கமைய ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் குத்தகை இதற்கு சான்றாகும் எனவும் நிலாந்தன் விளக்கமளித்துள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க கடந்த டிசம்பரில் புது தில்லிக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, 2025 ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் செய்தார். இது இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையில் இலங்கையின் நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பரபரப்பான கப்பல் பாதை
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றில் இலங்கை மூலோபாய இருப்பிடத்தை கொண்டமைந்துள்ளது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் செல்வாக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சீனா பெல்ட் எண்ட் ரோட் முன்முயற்சியின் (BRI) கீழ் இலங்கையில் பெரிய திட்டங்களைத் தொடங்கிய பின்னர், இந்தியா அதற்கு கவலை தெரிவித்திருந்தது.
ஆசிய நாடுகளுடனான வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் பாரிய உள்கட்டமைப்புத் திட்டத்தின் முக்கிய இடங்களில் இலங்கையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
