"இலங்கை அரசாங்கத்தின் கழுத்தை பிடித்து பணம் பெற்றுள்ள வெளிநாட்டு நிறுவனம்"
கொள்வனவு செய்யாத பொருளுக்காக அரசாங்கம் பணம் செலுத்தியுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் இந்தக்கருத்தை இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் “
இன்று காலையிலேயே ஊடகங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது சீனாவின் அந்த கழிவு உரக்கப்பலுக்கு 6.7 அமெரிக்க டொலர்களை செலுத்தவுள்ளார்களாம்”.
“எங்கே இந்த மஹிந்தானந்த என்று எனக்கு கேட்க தோன்றுகின்றது”
“மஹிந்தானந்தாவே தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பித்திருப்பார்.”
”சீனா , இந்த அரசாங்கத்தின் கழுத்தை பிடித்து சுவரில் அடித்து தான் இந்த பணத்தை பெற்றுள்ளது.”
”நாம் வாங்காத ஒரு பொருளுக்கு நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதே முதல் கேள்வி!”
”இதற்கு பொறுப்பு கூறவேண்டிய மஹிந்தானந்தவும், சஷேந்திரவும் என்ன செய்கின்றார்கள்? “
“வாங்காத பொருளுக்கு பணம் செலுத்த வேண்டுமென்றால் கொள்வனவு செய்த விடயத்தில் தவறு உள்ளது.”
“அப்படியென்றால் தவறான பொருளை கொள்வனவு செய்து வரவைத்தது யார்? ”
“ஒரு கடைக்கு சென்று எமக்கு தேவையான பொருளை கொள்வனவு செய்தால் மட்டுமே நாம் பணம் கொடுப்போம்.“
“முதலாளியின் விருப்பத்திற்கு வழங்கும் பொருளுக்கு பணம் கொடுக்கமாட்டோம்.“
”ஆகவே நாம் கேட்காத பொருளுக்கு பணம் கொடுக்க நேரிட்டால் இதை கொண்டு வர வைத்தவர் தான் தவறு“.
“அவர்கள் யாரென்று அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்”
“அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.”
"நாம் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கின்றோம் ”அடுத்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் வருகின்றது”
“இந்த தவறுகளை செய்யும் அனைவரும் தயாராக இருங்கள்!”
“நீதிமன்றத்தினூடாக தண்டனைகளுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள் என்று நான் தெளிவாக தெரிவித்துக்கொள்கின்றேன்”.
”அடுத்த வருடம் வருவது ரணில் விக்ரமசிங்கவுடைய டீல் அரசாங்கம் அல்ல”
”சட்டத்தை சரியாக நேர்த்தியாக கடுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கமே வரப்போகிறது என்று எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.”



