அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சீனா - உலக நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை..!
சர்வதேச அளவில் காணப்படும் அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் சீனா தனது அணு ஆயுதங்களைக் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பல நாடுகளும் சீனாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இந்த விடயம் உலக ஆராய்ச்சியாளர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும் உலகளவில் பார்க்கும் போது அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குறித்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
இது குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டான் ஸ்மித் கூறுகையில்,
"சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல ஒரு விடயம் ஆகும்.
தற்போது சர்வதேச அளவில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் காணப்படுகின்றன.
At the start of 2023, the 9 nuclear-armed states possessed an estimated 12 512 nuclear weapons:
— SIPRI (@SIPRIorg) June 12, 2023
USA?? 5 244
Russia?? 5 889
UK?? 225
France?? 290
China?? 410
India?? 164
Pakistan?? 170
North Korea?? 30
Israel?? 90
Read more in #SIPRIYearbook 2023 ➡️ https://t.co/OX8Eubunzu pic.twitter.com/BJzHpdODb7
2022ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 12,710 ஆக காணப்பட்ட அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 2023இல் 12,512 ஆக குறைந்துள்ளது.
ரஷ்யாவின் ஆயுத எண்ணிக்கை
எனினும் இந்த பட்டியலில் 9,576 ஆயுதங்கள் இராணுவ ரீதியான தாக்குதலுக்கு தயாராக காணப்படுகின்றன. அதேபோல தாக்குதலுக்கு தயாராக இருக்கும் கையிருப்பு ஆயுதங்கள் செயலிழக்க வைக்கவுள்ள ஆயுதங்கள் என தனித்தனியாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவிடம் இருந்த ஆயுதங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சீனாவிடம் 350இல் இருந்து 410ஆக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவும் தங்கள் கையிருப்பில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.
அதேபோல ரஷ்யாவின் ஆயுதங்கள் எண்ணிக்கை 4,477இல் இருந்து சற்று உயர்ந்து 4,489ஆக அதிகரித்துள்ளது.
சீனா மறைமுக எச்சரிக்கை
அதேநேரம் ஏனைய நாடுகளின் எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. தற்போது ரஷ்யா அமெரிக்காவிடம் மாத்திரமே உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதமான ஆயுதங்கள் காணப்படுகிறன.
இருப்பினும், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களைக் குறைக்க முன் வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த தூதரக முயற்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் நிலைமை காரணமாக அணு ஆயுதம் குறித்த ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க இரத்து செய்துள்ளது.
அதேபோல அணு ஆயுதங்கள் குறித்த நியு ஸ்டார் ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா விலகியுள்ளது.
இருப்பினும், சில ஆண்டுகளாகவே சீனா அதிகளவில் அணு ஆயுதங்கள் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை உலக நாடுகளை சீனா மறைமுகமாக எச்சரிக்கும் நிலையை காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |