சீருடைகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்விற்கு தாமதமாக வந்த பிரதமர் ஹரினி
சீன(China) அரசாங்கத்திடமிருந்து கையளிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய ஒரு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார்.
இதன்காரணமாக, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சீன தூதுவர் வேறு பணிகள் உள்ளன என தெரிவித்து நிகழ்வில் இருந்து வெளியில் சென்று பின்னர் மீண்டும் சிறிது நேரத்தின் பின் வருகைத் தந்துள்ளார்.
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத் துணிகள் சீனத் தூதுவரினால், பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் நேற்று(10) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
தாமதமாக வந்த பிரதமர்
முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவிருந்த வைபவத்தில் பிரதமர் கலந்து கொள்வதற்கு 1 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதனால் சீனத் தூதுவர் வெளியில் சென்றுவிட்டு, திரும்பி வந்த பின்னரே உத்தியோகபூர்வமாக சீருடைகளை பிரதமரிடம் கையளித்துள்ளார்.
இந்த சீருடைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனா மாணவ துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
சீன அரசாங்கம்
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவையாகவுள்ளதுடன், பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன், முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளது.
மூன்றாவது தொகுதி டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |