நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ள சீனா
இலங்கைக்கு ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.
அவை நேற்றையதினம்(5) கொழும்பில் உள்ள அனைத்து முகாமைத்துவ நிலையத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்கள்! 200ற்கும் மேற்பட்டோர் பார்வை
சீனா நன்கொடை
சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங் இந்த உதவியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவிடம் வழங்கினார்.
10 மில்லியன் யுவான் மதிப்புள்ள இந்த நன்கொடையில் கூடாரங்கள், படகுகள், படுக்கைகள், உயிர் காப்பு அங்கிகள், சமையலறை பெட்டிகள், வெள்ளக் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் இந்த உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.
காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களை நிவர்த்தி செய்வதில் சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சீனா சரியான நேரத்தில் ஆதரவளித்ததற்காக பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தார்.




