இலங்கைக்கு 10 இலட்சம் சினோவெக் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் சீனா
இலங்கைக்கு ஒரு தொகை 'சினோவெக்' கோவிட் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்குச் சீனா அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி 10 இலட்சம் டோஸ் சினோவெக் தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்றும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சினோவெக்' உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைகளில் ஒன்றாகும். இதன்படி கடந்த ஆகஸ்ட் இறுதி வரையில் சுமார் 50 நாடுகளால் 1.8 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இதில் 1.4 பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன எனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்தத் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன என்று சீனத் தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.