அமெரிக்காவை நிலை குலைய வைத்துள்ள சீனாவின் தொழில்நுட்பம்
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் அப்பிள் அப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது.
டீப்சீக் என்பது சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் சட்போட் (Chatbot) ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானது.
டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது.
6 மில்லியன் டொலர்கள்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை கதிகலங்க வைத்துள்ளது.
இது ஓபன் சோர்ஸ் (Open Source) டீப்சீக்-வி3 மாதிரியாக செயல்படுகிறது. இதை உருவாக்க 6 மில்லியன் டொலர்களைவிட குறைவான தொகையே செலவானதாக அதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள்
உயரிய தொழில்நுட்பத்துடனான இறக்குமதி செய்யப்பட்ட சிப்கள் சீராக கிடைக்காத நிலையில், சீன செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் அந்த தொழில்நுட்பம் தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் முயற்சித்துள்ளனர்.
இதனால் முன்பைவிட குறைவான அளவே கணினி ஆற்றல் தேவைப்படும், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாகியுள்ளன.
முன்னதாக இம்மாதத்தில் டீப்சீக்-ஆர் 1 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணிதம், கோடிங் மற்றும் மொழி பகுத்தறிதல் போன்றவற்றில் இதன் செயல்பாடு ChatGPT தயாரிப்பாளரான Open AI உருவாக்கிய மாதிரிகளுக்கு இணையாக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
