சீனாவின் சைபர் கிரைமுடன் இலங்கை இராணுவத்தின் இரகசிய நகர்வு! இராணுவ ஆய்வாளர் தகவல்
ஜனாதிபதி தெரிவிற்கு பின்னர் போராட்டமொன்று ஆரம்பமாகுமாக இருந்தால் இலங்கை மிகப்பெரிய ஒரு இரத்தக்களரியை அல்லது வன்முறையை சந்திக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தான் அதிகம் தென்படுகின்றதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனா இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த நிலையில் தற்போது சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் ஒன்றை கூறியிருக்கிறார், தாம் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் பொசிட்டிவான ஒரு பாத்திரத்தை எடுப்போம் என்று பல முக்கிய தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தான் ரணில் விக்ரமசிங்க சமூக வலைத்தளங்கள் தொடர்பாக பேசியுள்ளார். சீனாவில் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார்கள் என்று தெரியும். சில சில சமூக வலைத்தளங்களை இயக்கவே முடியாது. சீனாவின் சைபர் பாதுகாப்பு பிரிவையும் கொண்டு இலங்கை இராணுவத்துடன் இணைந்து தான் அவர்கள் இந்த பணியை செய்யப் போகிறார்கள்.
அதேபோல இனிவரும் போராட்டங்களை எவ்வாறு அடக்குவது என்பது தொடர்பாக அவர்கள் ஏற்கனவே பல படையணிகளை கொழும்பிற்குள் நகர்த்திவிட்டார்கள். தற்போது அவர்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் யார் ஜனாதிபதியாக வருகிறாரோ அதற்கு பின்னர் ஒரு போராட்டம் ஆரம்பமாகுமாக இருந்தால் இலங்கை மிகப்பெரிய ஒரு இரத்தக்களரியை அல்லது வன்முறையை சந்திக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தான் அதிகம் தென்படுகின்றனதாக குறிப்பிட்டுள்ளார்.




