இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா உறுதி!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், வாங் வென்பின் (Wang Wenbin) தமது வழமையான வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் (13.04.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பைத் தீவிரமாகச் செயல்படுத்துவதில் சீன நிதி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணைந்து பணியாற்றும்
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கடன் வழங்குநர்களான, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள 'புதிய தளம்' தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வென்பின், 'சீனா தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், நியாயமான சுமை பகிர்வின் அடிப்படையில் இலங்கையின் கடன்
மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களைச்
சீனா அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.