பிபிசி சேவைக்கு தடைவிதித்த சீனா!
பிபிசி நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன அதிபர் ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாக கூறி BBC world news தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
பிபிசி தொலைக்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான National Radio and Television Administration வெளியிட்டுள்ள அறிக்கையில்,
BBC world news தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகள் தீவிரமாக மீறப்பட்டுள்ளது, செய்திகள் உண்மைக்கு புறம்பாகவும், உகந்த முறையிலும் இல்லை.
இது சீனாவின் தேசிய எண்ணங்களை காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய காரணங்களால் சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் BBC world news தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் ஊடகவியாலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 4ம் திகதி பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் அனுமதியை இரத்து செய்தனர்.
இந்த சேனலுக்கான அனுமதி Star China Media Ltd நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாக கூறப்பட்டது.
இதேவேளை, சீன அதிகாரிகளின் தீர்மானத்தை எண்ணி கவலையடைவதாக BBC நிறுவனம் தெரிவித்துள்ளது.
BBC statement in response to Chinese ban of BBC World News pic.twitter.com/RpLwvW4OzO
— BBC News Press Team (@BBCNewsPR) February 11, 2021



