இலங்கையை பழி வாங்கும் சீனா
சீனா, இலங்கையில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த இரட்டை மின் உற்பத்தி முறைமை சம்பந்தமான மூன்று திட்டங்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் Sino Soar Hybrid Techology என்ற நிறுவனத்தினால், வடக்கில் மூன்று தீவுகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாக சீனத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு ஒன்றில் ஏற்படக் கூடிய பாதுகாப்பு காரணத்தின் அடிப்படையில், அந்த திட்டங்களை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் மேற்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளை அடங்கிய கப்பல் தொடர்பில் இலங்கையில் உருவான கடும் மக்களின் எதிர்ப்பு காரணமாக, அதற்கு பணத்தை செலுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கு சீன அரசு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
