பிலிப்பைன்ஸ் படகு மீது சீனா பீரங்கி தாக்குதல்
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சொந்தமான சிறிய படகின் மீது சீன போர்க்கப்பல்கள் தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று(23.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதலுக்குள்ளான படகு பலத்த சேதம் அடைந்துள்ளதோடு, சீனாவின் இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பகுதி
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்ற நிலையிலே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோரிவருவதோடு, குறிப்பாக சர்ச்சைக்குரிய பகுதியான இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான படகுகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு சிறிய படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இந்த மாதத்தில் நடைபெற்ற பிலிப்பைன்ஸ் மீதான சீனாவின் 2 ஆவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
