இலங்கையின் அதிருப்தியை கவனத்தில் கொண்டுள்ளதாக சீனா அறிவிப்பு
இலங்கையின் கொடி பொறித்த அச்சுடன் அமேசனில் விற்பனை செய்யப்படும் வீட்டுவாசல் விரிப்பு தொடர்பாக இலங்கையின் அதிருப்தியைக் கவனத்தில் கொண்டுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை எழுப்பியுள்ள கரிசனை குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. நாடுகளின் தேசியக் கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.
இந்தநிலையில் இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்துக்காகச் சீனா தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறது என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட இலங்கையின் வெளியுறவு செயலாளர் எட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, சீனாவைத் தளமாகக் கொண்ட உற்பத்தியாளரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தார்.
அமேசனில் இலங்கை கொடியுடனான வாசல் விரிப்பு ஒரு துண்டு 12 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.