முசலி பிரதேச விவசாயிகளுக்கு அதி உயர் மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு
மீண்டும் மீள் குடியேறியுள்ள முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அளக்கட்டு கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதி உயர் மிளகாய் உற்பத்தி செய்கைக்கான விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (31) மதியம் இடம்பெற்றுள்ளது.
றிசாட் பதியுதீன் தலைமை
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் வருகை தந்து பார்வையிட்டதோடு தெரிவுசெய்யப்பட்ட 250 விவசாயிகளுக்கு உயர் தரத்திலான மிளகாய் செய்கைக்கான விதைகளை இலவசமாக வழங்கி வைத்தனர்.
உயர் தரத்திலான மிளகாய் விதைகளை எவ்வாறு பயிரிட்டு பலன் பெற்றுக்கொள்வது மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து வந்து விவசாயிகளுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.