சிறுவர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள்! அதிர்ச்சி தரும் அறிக்கை
கடந்த மூன்று வருடங்களில் (2022 – 2023 -2024) சிறுவர்களை தவறான நடத்தைக்கு உட்படுத்தல், கொலை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள்,குற்றங்கள் எட்டாயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (8492) நடந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதிர்ச்சி தரும் அறிக்கை
குறித்த காலகட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகள் தவறான நடத்தைகளின் எண்ணிக்கை 4309 ஆகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 54 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
2022 ஆம் ஆண்டில், சிறுவர்களுக்கு எதிரான 2821 வன்முறை குற்றங்களும், 2023 ஆம் ஆண்டில், 2764 வன்முறை குற்றங்களும் நடந்துள்ளன.
2024 ஆம் ஆண்டில், 2907 குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 10 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
