இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே..! சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி

Sri Lanka Army Government Of Sri Lanka Sri Lanka Final War
By Diasa May 21, 2024 12:13 AM GMT
Report

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனது விஜயம் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே..! சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி | Children Who Surrendered To Army In Final War

இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இவ்வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

நான் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான் இந்த விஜயத்தினை மேற்கொண்டேன்.

நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டேன். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

உளவியல் சித்திரவதை

இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது. காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை. அது முடிவிற்கு வராது. பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே..! சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி | Children Who Surrendered To Army In Final War

மரணத்தை விட இது வலிமிகுந்தது. வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படும். இது உளவியல் சித்திரவதை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும். அந்த குழந்தைகள் எங்கே நான்கைந்து மாத குழந்தைகள் மூன்று நான்கு வயதானவர்கள் நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.

15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம்.

இது மன்னிக்க முடியாத குற்றம்- இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள். சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள். எங்கே அந்த குழந்தைகள்..! என தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கனடாவில் நிலவும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் நிலவும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US