பிள்ளைகளின் மோசமான செயல் - தொற்றுக்குள்ளான பெற்றோரை வீதியில் விட்டு சென்ற அவலம்
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வெல்லம்பிட்டிய சந்தியில் வயோதிப பெற்றோரை நடுவீதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இருவரையும் பிள்ளைகள் அவ்விடத்தில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடை ஒன்றில் முன்னால் விழுந்து கிடந்த இந்த இருவரையும் சுகாதார அதிகாரிகள் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றியமையினாலேயே பிள்ளைகள் வீதிகளில் விட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரையும் ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கொத்தட்டுவ சுகாதார வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தம்பதிக்கு கடந்த நாட்களாக அருகில் இருந்தவர்களே உணவு வழங்கி அவர்களை சுத்தப்படுத்தியுள்ளனர். சுத்தப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பிள்ளைகளின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அந்த பெற்றோர் பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வெளியிட விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
