பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் தேவை!
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், "கல்விக்குச் செய்யும் உதவியே மேன்மையானதும் முதன்மையானதுமாகும்.
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமாயின் ஒரு கிராமம் அபிவிருத்தியடைய வேண்டுமாயின் கல்வியே அடிப்படையானது. அந்த அடிப்படையில் கல்விக்கான உதவிகளை 16ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் ஏடு நிறுவனம் பாராட்டுக்குரியது.
கிடைக்கும் உதவிகள்
ஏடு நிறுவனத்தை இயக்கும் அணியும் சிறப்பானது. கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் பலர் செய்யும் உதவிகள் உரியமுறையில் இங்கு கிடைப்பதில்லை. சிலர் ஏமாற்றியிருக்கின்றார்கள்.
ஆனால், ஏடு நிறுவனம் நம்பிக்கைக்குரியவர்களை இங்கு வைத்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. அரசின் எந்தத் திணைக்களமாக இருக்கலாம் அல்லது வங்கிச் சேவைகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அங்குள்ள பணியாளர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களும், தட்டிக்கழிக்கும் போக்கும் அதிகரித்துச் செல்கின்றது.
ஒரு வசதியும் இல்லாத காலத்தில் சகல இடங்களிலும் மக்கள்நேய வாடிக்கையாளர் சேவை இருந்தது. ஆனால் இன்று எல்லாமே இயந்திரமயப்பட்டு இணையம் ஊடான சேவையாகிய பின்னர் மனித உணர்வு இல்லாமல் மனிதர்களும் இயந்திரமாகிவிட்டனர்.
அதனால்தான் மற்றவர்களை மதிக்கம் பண்போ, உதவும் எண்ணமோ இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் உண்டு. இன்று இங்குள்ள பிள்ளைகள் நீங்கள்தான் வளர்ந்து பெரியவர்களாகி இந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யப்போகின்றவர்கள். நீங்கள் உங்களிடம் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை, இரங்கும் பண்பை, மதிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |