யாழில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்ப உத்தரவு
யாழில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றில் தெரிவித்துள்ளது.

விசாரணைகள் முன்னெடுப்பு
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம்,மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டு வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri