தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தொடருந்து மோதியதில் உயிரிழப்பு
இந்தியா (India) - சத்தீஷ்கரில் சிறுவர்கள் இருவர், தண்டவாளத்தில் அமர்ந்து கையடக்க தொலைபேசியில் விளையாடி கொண்டிருந்த போது தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார்கள்.
சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டத்தில் உள்ள ரிசலி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய குறித்த சிறுவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, அப்போது தொடருந்து வருவதை அவதானிக்காமல் இருந்துள்ள நிலையில் அதிவேகமாக வந்த தொடருந்து அவர்கள் மீது மோதியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தகவல் அறிந்த இந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன் பின்னர் சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
