இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் பருமனால் அவதிப்பட்டால், அவர்கள் உயிரிழக்க கூட நேரிடும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் 10 குடும்பங்களில் 04 வீடுகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என உலக உணவுத் திட்டம் வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.
பலருக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைக்கின்றது
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பலருக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நொச்சியாகம லிங்கால பிரதேச கிராம மக்கள் இதற்கு சிறந்த உதாரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு இன்று விஜயம் செய்தனர்.
இதனிடையே, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குழந்தைகளின் போசாக்கு குறைபாட்டின் நிலை குறித்தும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.