பாடசாலை மாணவர்களின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்
கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.
90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து எடுத்து தனது ஆசிரியரிடம் கொடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.
இந்த மாணவர்கள் கண்டி மெனிக்ஹின்ன உயர்தரப் பாடசாலையில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றனர்.

பலர் பாராட்டு
மதுசங்க ருக்ஷான் (13), யசித் சமல் ரத்நாயக்க (13), மற்றும் இசுரு சமத்சேனாதிர (13) ஆகியோர் நடன வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, தரையில் கிடந்த பணப்பையை கண்டு அதனை எடுத்து பாடசாலை நடன ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அதிபர் ஊடாக உரிமையாளரின் விபரங்களை உறுதிப்படுத்தி பாடசாலைக்கு அழைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்கள் அடங்கிய பணப்பையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் செயற்பாட்டிற்கு பலரும் தமரு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri