நிறுத்தப்பட்ட அமெரிக்க நிதி உதவி: கானாவில் சிறார்களின் தடுப்பூசி திட்டங்களுக்கு அச்சுறுத்தல்
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரியின் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டமையால், கானாவின் சுகாதாரத் துறைக்கு 78.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிறார்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.
மலேரியா தடுப்பூசிகளை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில், தடுப்பூசி விநியோகம், கிராமப்புறப் பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் மருந்துகளுக்கான குளிரூட்டல் வசதிகளைப் பேணுவதில் தற்போது தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
75 சதவீதமான மாவட்டங்களில் தடுப்பூசி விநியோகம் தாமதமடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை
இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துதல், தனியார் துறையின் முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திட்டங்களை நோக்கி கானா அரசு கவனம் செலுத்தி வருகின்றது.

இருப்பினும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிச் சிறார்களுக்குத் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்த நிதி இழப்பு உடனடி சவாலாக அமைந்துள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடக்கில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை