கிழக்கு மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வு
சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான இளைஞர்கள் முன்னணியினால் 'வினைத்திறனான சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்' என்ற தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வினை, சிறுவர் நிதியம், சிறுவர் அபிவிருத்தி நிதியம் உள்ளிட்ட அமைப்புக்கள் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தன.
கிழக்கு மாகாணத்தில், சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் அதிகாரிகளிடம் மேற்கொண்ட பண்புசார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு கருத்துக்கள்
இதன் அடிப்படையில் ஆய்வின் விளைவுகளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு சேவை வழங்குவதில் தற்போது உள்ள முக்கியமான இடைவெளிகளை கண்டறிவதற்காக முறையான தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தலும் பரிந்துரைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தலும், சிறுவர் பாதுகாப்புசார் சேவைகளை வழங்கும் அதிகாரிகளுக்கு சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான இளைஞர்கள் முன்னணியினால் தெளிவுபடுத்தும் நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, குறித்த அமைப்பால் ' இலங்கையில் சிறுவர்கள் அதிகம் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக பணிபுரியும் அதிகாரிகள் வன்முறைகளை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல தடைகள் உள்ளன.
குறிப்பாக பயிற்சி, நிதி தொடர்பான தடைகள் அதிகம் உள்ளதுடன் சமூக மட்டத்தில் சிறுவர்களுக்காக பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் கடமைகள் பொறுப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தல் போதியளவு இன்மை குறித்த தமது ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், திருகோணமலை அரசாங்க அதிபர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |