இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பாதியளவான குடும்பங்களில் குழந்தைகளின் உணவு உட்கொள்ளல் குறைத்துள்ளதாக சேவ் தெ சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசும் உலக சமூகமும் செயல்பட வேண்டும் என்று சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது.
பசி நெருக்கடி
இலங்கை மக்கள் பசி மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
மக்களின் துன்பத்தைப் போக்க சர்வதேச கடன் வழங்குபவர்கள் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச மன்னிப்புச்சபை கோரியிருந்த நிலையில் சேவ் தெ சில்ரனின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஒரு முழு அளவிலான பசி நெருக்கடியாக மாறியுள்ளது.
நாட்டில் உள்ள குடும்பங்களில் பாதி பேர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று குழந்தை உரிமைகள் தொண்டு நிறுவனமான சேவ் தெ சில்ரன் கூறுகின்றது.
குழந்தைகளுக்கு சத்தான உணவு
இலங்கையில் பாதி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், 2,300 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 27 சதவீதத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பெரியவர்கள் உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.
10 குடும்பங்களில் ஒன்பது பேர் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவுக்கு
உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர் என்றும் சேவ் தெ சில்ரன்
சுட்டிக்காட்டியுள்ளது.