தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழப்பு
கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில், தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையைத் தந்தை தூக்கி செல்லும்போதே இந்தச் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குழந்தையின் தலைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அங்கு இருந்து உடனடியாக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தை பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மேலதிக விசாரணைகளைப் கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
