தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்! அடித்துக்கூறும் விக்னேஸ்வரன்
மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V. Vigneshwaran) தெரிவித்துள்ளார்.
13ஆவது சீர்திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி தோன்றியதாகவும் அதற்கு முன் சிங்கள இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துட்டகைமுனு
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறுவது போல துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் இல்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில் சிங்களம் என்ற ஒரு மொழியே இல்லை.
துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் எனக் கூறும் மெர்வின் சில்வா இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆதி மொழி
அத்துடன், பாளி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளின் கலவையிலேயே சிங்கள மொழி உருவாக்கப்பட்டது.
இலங்கையில் பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பாளி மொழியும் கொண்டுவரப்பட்டது. ஆனால், தமிழ் மொழியே இலங்கை தீவின் ஆதி மொழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
