கொழும்பில் சிறுமியின் தவறான நட்பால் ஏற்பட்டு பாரிய விளைவு -3 இளைஞர்கள் கைது
நுகேகொடையில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் 13 வயது சிறுமி மூன்று இளைஞர்களால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுமியின் வீட்டிற்கு அருகில் நடந்த இறுதிச் சடங்கின் போது 23 வயது இளைஞனுடன் சிறுமி காதல் உறவில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபர் சிறுமியை தெஹிவளை பிரதேச கடற்கரைக்கு அழைத்துச் சென்று சில மணித்தியாலங்களை கழித்த பின்னர் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த சம்பவத்திற்கு பின்னர் சில மாதங்களில் சிறுமியின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நண்பியின் சகோதரரான 21 வயதுடைய இளைஞனுக்கும் சிறுமிக்கு இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞன், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பிறகு, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று, சிறுமியின் வீட்டில் நடந்த விருந்தின் போது, அதிகமாக மது அருந்திய 19 வயது இளைஞன் ஒருவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நீண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி இது தொடர்பில் தனது நெருங்கிய தோழியிடம் தெரிவித்ததையடுத்து, அந்த நண்பி வகுப்பு ஆசிரியருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கிருலப்பனை பொலிஸாரின் 1929 உதவி சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியை அழைத்து பொலிஸார் விசாரித்ததில், இந்த குற்றம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.
சிறுமியை முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.