10 வயது சிறுமிக்கு நீண்டகாலமாக நேர்ந்த கொடுமை! வெளியான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (08.04) தெரிவித்தனர்.
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மாணவி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam