இளைஞன் மற்றும் சிறுமி செய்த மோசமான செயல்! - பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் 13 வயதுடைய சிறுமியுடன் ஒரே வீட்டில் இருந்த திருகோணமலையினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை மூதூர் பகுதியினை சேர்ந்த இளைஞன் மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக வேலைதேடி வந்துள்ளார்.
இளைஞன் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில் இளைஞனின் பிரதேசத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை அவரின் விருப்பத்துடன் அழைத்து வந்து சுமார் ஒரு மாதகாலமாக வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுமி தொடர்பிலான தகவல் தெரிய வந்தமையை தொடர்ந்து சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குறித்த இளைஞனை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியும் பொலிஸாரினால் கைது செய்துள்ளதுடன், மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று (16) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.