தென்னிலங்கையின் நிர்வாண மனநிலையும் அம்பலமாகும் உண்மைகளும்(Video)

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Final War Crime
By Vethu Jul 08, 2023 08:00 PM GMT
Report

இலங்கை சிங்கள நாடு. புத்த தர்மம் தலைத்தோங்குவதாக இனவாதிகள் கூச்சலிட்டு வருகின்றனர்.

அன்பையும் அமைதியும் போதித்த புத்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு சிங்களவர்களின் வக்கிரங்கள் உச்சம் கண்டுள்ளன.

சிங்களவர்கள் மத்தியில் நிர்வாணம் எனும் கலாசாரம் இன்று அல்ல அன்று தொட்டே இரத்தத்தில் கலந்த ஒன்றாகவே உறுதியாகி உள்ளது.

உலகம் மாறி விட்டது. அனைத்தும் முழுமையாக மாறி விட்டன. எனினும் இந்த வெறிபிடித்த காடையர்களின் நிர்வாண கலாசாரம் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

தென்னிலங்கையின் நிர்வாண மனநிலையும் அம்பலமாகும் உண்மைகளும்(Video) | Child Abuse In Sri Lanka Tamil Genocide

நிர்வாண கலாசாரம்

1983ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீதான அடக்குமுறையின் போது உச்சம் தொட்ட வன்முறையின் வெளிப்பாடான நிர்வாணப்படுத்தல் இன்று அவர்கள் தங்கள் இனத்திற்குள் அதனை பிரயோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

2007 அக்டோபர் 22 ஆம் திகதி அதிகாலை அநுராதபுரத்திலுள்ள இலங்கை வான்படை தளமொன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

அத்தாக்குதலில் பங்கெடுத்த பெண் போராளிகள் உட்பட 21 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டு அவை ஆடைகள் களையப்பட்டு, மிகவும் மோசமான முறையில் அந்த சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் வழங்கப்பட்டன.  


இதன்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யுத்த விதிமுறையை இலங்கை படையினர் மீறியிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக பெரிய யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள்,  பொது மக்களில் ஆண் பெண் இருபாலாரும் ஆடைகள் களையப்பட்டு மிகவும் மோசமான முறையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பல தரவுகளும், ஆதாரங்களும்,புகைப்படங்கள், காணொளிகள் சர்வதேச ரீதியாக வெளியாகின.

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரின் போதும் பல பெண்கள் துயில் உரியப்பட்டனர். பல பெண் போராளிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டன. அத்தனையும் புத்தர் போதனையில் வாழும் சிங்களவர்களின் வெறியாட்டம் ஆகும்.

கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்ட தமிழர்களை ஆடைகளை நீக்கி நிர்வாணமாக்கி அதனை சாதனை என நினைத்து காணொளிகளாக சிங்களவர்கள் மத்தியில் வெளியிட்டு  வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது சிங்கள இராணுவம்.

40 வருடங்கள் கடந்துள்ள போதிலும் சிங்கள இரத்தத்தில் கலந்திருக்கும் நிர்வாணப்படுத்தல் எனும் வக்கிரம் இன்னும் மாறவில்லை என்பதை நேற்றைய சம்பவம் பலருக்கும்  புரிய வைத்திருக்கும்.

சிங்களவர்களின் வக்கிர புத்தி

தென்னிலங்கையின் நிர்வாண மனநிலையும் அம்பலமாகும் உண்மைகளும்(Video) | Child Abuse In Sri Lanka Tamil Genocide  

இந்நிலையில் நேற்றையதினம் கொழும்பு, நவகமுவை பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் வைத்து ஒரே நேரத்தில் தாய், மகள் ஆகியோருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த பிக்கு மற்றும் குறித்த இரண்டு பெண்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது இரண்டு பெண்களும் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அதனை காணொளி எடுத்து வெளியிட்டனர். நான்கு சுவருக்குள் நடந்த அந்தரங்கத்தை காணொளியாக எடுத்து இன்று உலகம் பார்க்கும் அளவிற்கும் அதனை பிரபல்யப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பௌத்த பிக்குவுடன் தகாத உறவில் இருந்த இரு பெண்கள் செய்த செயல் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்குவது சட்டத்தின் கடமையாகும்.

இந்நிலையில் அந்த இரு பெண்களின் ஆடை களையப்பட்டது தொடர்பில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை இவ்வாறு தவறான முறையில் நடத்த கூடாதென்பதை கடந்த காலங்களில் இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

தவறான எண்ணத்தில் செயற்பட்ட பெண்களின் ஆடை களைவது தவறென்றால், இனத்திற்காக போராடிய பெண்களின் ஆடைகளை களைத்து, அவர்களை மானபங்கம் செய்து, புகைப்படங்கள், காணொளிகள் எடுத்து வெளியிட்டதை ஏன் இன்றுவரை இந்த சமூகத்தலைவர்கள் சுட்டிக்காட்டவில்லை.

ஏன் அவ்வாறானதொரு மோசமான செயலை செய்த சிங்கள இராணுவத்தினரை மன்னிப்பு கோர சொல்லவில்லை.தங்கள் தவறை அவர்கள் உணருவதற்கு ஏன் வழிகாட்டவில்லை.   

யார் மனிதர்கள்..?

தென்னிலங்கையின் நிர்வாண மனநிலையும் அம்பலமாகும் உண்மைகளும்(Video) | Child Abuse In Sri Lanka Tamil Genocide

இன்றும் கூட வலைத்தளங்களில் உள்நாட்டு போர் தொடர்பான புகைப்படங்களை பார்த்தால், அங்கு பெண் போராளிகள் ஆடை களையப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அவர்களை மரணிக்க செய்த சாட்சியங்கள் முன்னிக்கின்றன. இந்த வலிகளும் வடுக்களும் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன.

அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?  இந்த பெண்களுக்காக கொந்தளிக்கும் அந்த சமூகம் ஏன் அப்போதைய குற்றங்களுக்கான மன்னிப்பை கூட கோர சொல்லவில்லை?

யுத்தத்தின் பொதுவான மான்புகளை மறந்து நிர்வாண கலாசாரத்தை பின்பற்றியவர்கள் தென்னிலங்கை அரசு என்ற விமர்சனபோக்கும் விவாததன்மையும் தொடர்ந்தும் இருக்கின்றமை அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று.

அன்று எப்படி காடையர்களின் நிர்வாண கலாசாரம் தலை தூக்கியதோ, அதே நிலைதான் இன்றும். இதுதான் அவர்களின் இயல்பு. இந்த இயல்பு மாற வேண்டும். 

எந்த இனமாக இருந்தாலும் ஆண், பெண் என யாராக இருந்தாலும், அவர்களின் தவறுகளை தண்டிப்பதற்கு நிர்வாண கலாசாரம் ஓர் ஆயுதமல்ல.

அதேபோன்று நியாயம், தர்மம் பேசும் சமூக தலைவர்களும் பொதுநலவாதிகளும் எப்போதும், எது நடந்தாலும் நியாயத்தை பேச வேண்டும்.

இந்த சம்பவத்திற்கு, விருபத்துடன் ஒருவர் ஆடையை களைவதற்கும் பலாத்காரமாக இன்னொருவரின் ஆடையை களைவதற்கும் வித்தியாசம் உண்டு. பௌத்த துறவி செய்தது தவறுதான், ஆனால் அதேப்போன்று அந்த இரு பெண்களின் ஆடையை கிழித்தெறிந்தமையும் தவறு. அதனை கிழித்தெறிந்த நீங்களெல்லாம் மனிதனா என ஒரு பௌத்த பிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மனிதர்கள் இல்லை, ஆம் ஏற்றுக்கொள்கின்றோம்.

இதேவேளை 2009 யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பொது மக்களின் ஆடைகளை பலாத்காரமாக கிழித்தெறிந்த மனிதர்களை என்வென்று கூறிக்கொள்வார்கள்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US