யாழில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பதின் வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுசாராயம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கை
முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியிருந்தனர்.
நேற்றிரவு இரவு 8 மணிவரை சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலோ அல்லது தெல்லிப்பழை ஆதார மருத்துமனையிலோ அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முற்படுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளது.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தப்பட்டார். அவரது சிறுநீர் பரிசோதனையில் மதுபான செறிவு இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்றும் அறிக்கையிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் 22 மற்றும் 31 வயதுடைய இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்மூலை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி மதுபானம் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு சிறுமியின் தாயாருக்கு அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் வன்புணர்வு
இந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை உடனடியாக யாழ்.போதனா மருத்துவமனையில் முற்படுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
