யாழில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி,கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் இது பற்றி முறைப்பாடு அளித்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சிறுமியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு உறவினர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு |
யாழ். இளவாலை
யாழில் நேற்றுமுன்தினம் 6 வயது சிறுமி ஒருவரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி ஒன்றும் வெளியானது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டை சேர்ந்த 45 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேக
நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
