யாழில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இன்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு நபர் சிறுமியை அறைக்குள் அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி வீட்டுக்குள் அழைத்து சென்ற குறித்த நபர், சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக செய்தி-ராகேஸ்
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri