கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர்கள் தொடர்பில் பதிவான மகிழ்ச்சியான தகவல்
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகள் கடந்த வருடத்தில் 9 மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகம் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதாவது 1,024 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இதே காலகட்டத்தில், தீவு முழுவதும் இது தொடர்பாக பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 7,773 ஆகும்.மிகக் குறைந்த முறைப்பாடுகளாக அதாவது 29 கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
நாமலுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை:சர்ச்சையை கிளப்பியுள்ள பதிவு..
மாவட்டங்களில் பதிவான எண்ணிக்கை
ஐந்து மாவட்டங்களில் பதிவான முறைப்பாடுகள்: கொழும்பு 1,024, கம்பஹா 819, குருநாகல் 602, இரத்தினபுரி 533 மற்றும் அனுராதபுரம் 495.
மேலும், மற்ற மாவட்டங்களில் இதே எண்ணிக்கை முறையே களுத்துறையில் 483, காலியில் 481, கண்டியில் 394, புத்தளத்தில் 295 மற்றும் ஹம்பாந்தோட்டையில் 296 என பதிவாகியுள்ளன.
மாத்தறையில் 270, கேகாலையில் 252, பொலன்னறுவையில் 216, பதுளையில் 203, மொனராகலையில் 201, அம்பாறையில் 242, நுவரெலியாவில் 166, மட்டக்களப்பில் 144, மாத்தளையில் 137, திருகோணமலையில் 110 என பதிவாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் (89), முல்லைத்தீவு (60), வவுனியா (43), மன்னார் (35) மற்றும் கிளிநொச்சி (29) ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிகக் குறைந்த புகார்கள் பதிவாகியுள்ளன.