சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோதரியின் கணவர் தலைமறைவான நிலையில் சிறுமியின் தாயார் மற்றும் சகோதரி உட்பட இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த S.S.S.Samantha தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சகோதரியின் கணவன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பணியாகியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோதரியின் கணவர் தலைமறைவாகியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து தலைமறைவாகிய நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 வயதுடைய சகோதரி ஆகிய இருவரையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.
சமந்த தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri