சிக்குன்குனியா வைரஸ் பரவல்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
சிக்குன்குனியா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்(WHO) சிக்குன்குனியா எனும் நுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
சிறிய தீவுகள்
உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியாக இருக்கும் டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் கூறுகையில், உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
"2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
விரிவான தடுப்பு நடவடிக்கைகள்
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியது.
தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தென் ஆசியா(இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.
விரிவான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
