இலங்கை இராணுவத்தின் முதற்தர அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்- செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கை இராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது.
கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தின் வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்துடன் மாதமொன்றுக்கு 200 லீட்டருக்கும் மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படுகின்றது. வாகனத்துக்கு சாரதியொருவரும், உதவியாளர் ஒருவரும் வழங்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,