யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்
யாழ். மாநகர முதல்வர் தெரிவு நாளை (19.01.2023) நடைபெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆர்னோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ். மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளை (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் முடிவுக்கு வந்தநிலையில், இன்று மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைப்பட்டது.
சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட போது, இம்மானுவேல் ஆர்னோலட்டை முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
