வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான்.. அதிகரிக்கும் அச்சம்
உலக வரலாற்றிலேயே மிகக் கடுமையான இணைய முடக்கங்களில் ஒன்றை ஈரான் தற்போது எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி முதல், ஈரானில் முழுமையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 9.2 கோடி மக்கள் இணையம், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி சேவைகளின்றி தவித்து வருகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், அரசின் அடக்குமுறைகள் குறித்து சர்வதேச கவனம் செல்லாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முற்றிலும் முடக்கம்..
இதற்குப் பதிலளித்த ஈரானின் வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, வெளிநாடுகள் வழிநடத்தும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாகவே இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இணைய சேவைகள் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பது குறித்து ஈரான் அரசு இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
ஆனால், ஜனவரி 15ஆம் திகதி IranWire வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புத்தாண்டான மார்ச் இறுதி வரை சர்வதேச இணைய அணுகல் வழங்கப்படாது என அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமே மொஹாஜெரானி தெரிவித்துள்ளார்.
5,000 பேர் உயிரிழப்பு
FilterWatch என்ற இணைய சுதந்திர கண்காணிப்பு அமைப்பு, ஈரானை நிரந்தரமாக சர்வதேச இணையத்திலிருந்து துண்டிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவாக நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக எச்சரித்துள்ளது.

ஒருமுறை மீண்டும் இணையம் திறக்கப்பட்டாலும், அது முன்பிருந்த நிலைக்கு திரும்பாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை குறைந்தது 5,000 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டின் ஒரு பிராந்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் சுமார் 500 பாதுகாப்புப் படையினரும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். இது அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரிக்கின்றது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam