கோழி இறைச்சியின் விலை அதிகரித்து 1500 ரூபாயை எட்டும் நிலை
எதிர்வரும் நாட்களில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்கலாம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் எதிர்வரும் காலத்தில் ஒரு முட்டையின் விலை 50 ரூபா வரையும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபா வரையும் அதிகரிக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வீழ்ச்சி
கோழிப் பண்ணைகளுக்கு அடுத்த மாதத்திற்கு தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செயய இறக்குமதியாளர்களுக்கு வங்கிகள் ஊடாக 40 மில்லியன் டொலர்கள் கிடைக்க வேண்டும்.
டொலர்கள் கிடைத்தால், மேலும் ஆறு மாதங்களுக்கு கோழிப் பண்ணை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எவ்வாறாயினும் தற்போது கோழி முட்டை உற்பத்திகள் 40 வீதமாக குறைந்துள்ளதுடன் கோழி இறைச்சி உற்பத்தி 30 வீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கோழிப் பண்ணைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி காரணமாக உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்வரும் காலங்களில் மேலும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் இந்த நிலைமை ஏற்படலாம் என உலக வங்கியும் தெரிவித்திருந்தது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
