குறையும் கோழி இறைச்சியின் விலை
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டையின் விலையும் குறையக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட் வரியின் தாக்கம்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எவ்வாறாயினும், வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையில் அது தாக்கம் செலுத்தி தீவனத்தின் விலை அதிகரிக்குமாயின் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் போகலாம்.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தொடர்ச்சியாக தமது உற்பத்திகளை சந்தைக்கு அனுப்புவதால் முட்டையொன்று 35 – 40 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனையாகும் சாத்தியம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |